Help | Catalog | Print | |
Show as .
Show svaras in with and lyrics in with .

61.1 கழனிப் பாடல்

0516c - சாந்துப் பொட்டு - சி.சுந்தரி - மருதிப்பட்டி - தர்மபுரி மாவட்டம்

சாந்துப் பொட்டு வச்சிகிட்டு தில்லேலங்கடிலேலோ தில்லேலங்கடிலேலோ நெல்லறுக்கப் போறனடி தில்லேலங்கடிலேலோ நீட்டுப் பொட்டு வச்சிகிட்டு தில்லேலங்கடிலேலோ ஏ தில்லேலங்கடிலேலோ நெல்லறுக்கப் போறனடி தில்லேலங்கடிலேலோ வட்டப் பொட்டு வச்சிகிட்டு தில்லேலங்கடிலேலோ தில்லேலங்கடிலேலோ நான் வரகறுக்கப் போறனடி தில்லேலங்கடிலேலோ கை நிறைய வளயல் போட்டு தில்லேலங்கடிலேலோ தில்லேலங்கடிலேலோ நான் பயறு வக்கப் போறனடி தில்லேலங்கடிலேலோ வண்டி கட்டி மாடு கட்டி தில்லேலங்கடிலேலோ தில்லேலங்கடிலேலோ எல்லோரும் ஓட்டும் வண்டி சைக்கிள் வண்டி மோட்டர் வண்டி தம்பி பய ஓட்டுரது சரியான குப்ப வண்டி ஜோக்கு ஜோக்கு தான் தம்பி பயன் ஜோக்கு தான் எல்லோரும் தின்னும் கறி கோழிக்கறி மாட்டுக்கறி தம்பி பயன் தின்னுரது சரியான மன்னு கறி ஜோக்கு ஜோக்கு தான் தம்பி பயன் ஜோக்கு தான் எல்லோரும் ஓட்டும் வண்டி மாடு வண்டி சைக்கிள் வண்டி தம்பி பயன் ஓட்டுரது சரியான மன்னு வண்டி இஞ்சி எலும் பசங்க புள்ள எலும் பசங்க மாதிளம்பு மாதிளம்பு காலத்திலயும் சோக்கு சுந்தரமே உங்கன்னன் தம்பி ரயிலேறி வாராங்கடி என் பொன்னு உன்னால வண்டி வருகுதையா வட மதுர டேஷனாண்ட கண்டு போய் டிக்கட்டு வாங்கு என் கனகரத்தினமே உங்கன்னன் தம்பி காணாதவர சொல்லுர என் பொன்னும் தராம ஒடற வண்டியிலே ஒடற வண்டியிலே ரயிலு வண்டி நம்புலெரிய என் சோக்கு சுந்தரமே உங்கன்னன் மாரு ரயிலேறி பாகுராங்க என் பாக்கு சுந்தரமே போறவரே போறவரே பிற பெங்குளூரூ போறவரே கண்டு பயன் தரத்ததாரென் என் பொன்னும் தராவே உன்ன ரயிலேறி வாராங்கடி என் தங்கம் தராவே அஞ்சு கிலாசு தண்ணிய பொல்லர கிலாசு உப்பு தண்ணிய கொண்டாமரு கொடத்து தண்ணிய என் தங்கம் தராவெ உன் கொடலெல்லாம் பெரட்டுதடி என் பொன்னும் தராவே மொந்த மேல மொந்தடிக்க மோரு மந்த மேலடிக்க
ஆரம் கட்டி வக்கல நீ என் தங்கம் தராவே உங்கன்னன் மாரு உன்ன டவுனுக்குள் அழுத்துரான என் பொன்னும் தராவே
அஞ்சு கிலாசு தண்ணிய பொல்லர கிலாசு உப்பு தண்ணிய உங்கன்னன்மாரு கொடத்து தண்ணிய தங்கம் தராவே அங்க ஆலவட்டம் போடுதடி என் பொன்னும் தராவே அஞ்சு மல்லி லேலங்கடி அடுக்கு மல்லி அத்த பையன் லேலங்கடி வச்சளரி செண்டு மல்லி லேலங்கடி செடிய மல்லி செடியோரம் லேலங்கடி வச்ச மல்லி எங்கத்த பையன் லேலங்கடி வச்சளரி அஞ்சு மல்லி லேலங்கடி அடுக்கு மல்லி அத்த பையன் லேலங்கடி வச்சளரி செண்டு மல்லி லேலங்கடி செடிய மல்லி செடியோரம் லேலங்கடி பூத்த மல்லி